ஸ்பெஷலான அல்வா கோதுமை அல்வா. எளிய முறையில் கொடுக்கப்பட்டுள்ளது, செய்து பாருங்கள்.
என்ன தேவை?
சம்பா கோதுமை - 4 டம்ளர்
சர்க்கரை - 6 டம்ளர்
நெய் - 4 டம்ளர்
ஜிலேபி பவுடர் - 1/4 ஸ்பூன்
ஏலம், முந்திரி, திராட்சை - சிறிதளவு
தண்ணீர் - 1/2 டம்ளர்
எப்படி செய்வது?
* முதலில் கோதுமையை ஊறவைக்கவும். பிறகு அதைக் கழுவி, தண்ணீரைக் களைந்து ஆட்டி, பால் பிழிந்து, தனியாக வைக்கவும்.
* சர்க்கரை, தண்ணீர் இரண்டையும் சிறிது கொட்டிக் கம்பிப்பதம் வரம்வரை காய்ச்சி அதில் கோதுமைப் பாலை ஊற்றி, கிளறுங்கள்.
* கலவை கெட்டியானவுடன் 2 டம்ளர் நெய்யை ஊற்றி, பிறகு நெய்யில் வறுத்த முந்திரி, ஜிலேபி பவுடர், திராட்சை மற்றும் ஏலப்பொடி இவற்றைப் போட்டுக் கிளறி இறக்கி வைக்கவும்.
* கோதுமைப் பாலை இறுத்து, மேலாக இருக்கும் நீரில் சர்க்கரைப் பாகு காய்ச்சி அல்வா தயாரித்தால் இதன் சுவை திருநெல்வேலி அல்வா போலிருக்கும்!
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply