சென்னை: காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராகத் திகழ்ந்த கராத்தே தியாகராஜன், 2001-ல் ஸ்டாலின் சென்னை மாநகராட்சி மேயராக இருந்தபோது துணை மேயராக இருந்தவர்.
திமுக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
தற்போது எந்தக் கட்சியிலும் இல்லாவிட்டாலும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும்போது, அவருக்குப் பக்கபலமாக இருப்பேன் என்று வெளிப்படையாகப் பேசி வருகிறார் தியாகராஜன். இவர் 1996லிருந்தே ரஜினியின் தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில், இன்று தந்தி டிவிக்கு பேட்டி அளித்த கராத்தே தியாகராஜன், “ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் வெற்றிடத்தை ரஜினிகாந்த் மட்டுமே நிரப்புவார். வரும் மார்ச் மாதத்திற்குள் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார்,” எனக் கூறி உள்ளார்.