
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வரும் மே மாதம் நடைபெற உள்ள லாகூர் தேசிய சபை தொகுதி எண் 123 இடைத்தேர்தலில் போட்டியிட உள்ளதாக முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சித் தலைவருமான நவாஸ் ஷெரீஃப் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த பொதுத்தேர்தலில் மூன்று தொகுதியில் வெற்றி பெற்ற அக்கட்சி உறுப்பினர் ஜாவீத் ஹாஸ்மி பதவி விலகியதால் அந்த தொகுதியில் காலியிடம் ஏற்பட்டதாக அக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி உறுப்பினர்கள் பதவி விலகியதால் காலியாக உள்ள ராவல்பிண்டியில் உள்ள 2 தொகுதி, லாகூர், ஷேகுபுரா, முல்தான் ஆகியவற்றில் தலா ஒரு தொகுதி, வேட்பாளர் மரணமடைந்ததால் ஒத்தி வைக்கப்பட்ட தேசிய சபை தொகுதி எண் 119 ஆகியவற்றில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-எஸ்.எஸ்
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply