திருச்சி : சிறுநீரகக் கல்லைப் போக்க வல்லது வாழைத்தண்டுச்சாறு. தற்போது
இது மாத்திரை வடிவில் கிடைக்க உள்ளது.
திருச்சியில் உள்ளது தேசிய வாழை ஆராய்ச்சி மையம். இது சிறுநீரகக் கல்லை
போக்கும் வாழைத் தண்டுச் சாறை மாத்திரை வடிவமாக மாற்றும் ஆய்வில் உள்ளது.
திருச்சிக்கு அருகே பொடாவூர் கிராமத்தில் 38 ஹெக்டேர் நிலத்தில்
ஆராய்ச்சிக்காக வாழைத் தோப்பு உள்ளது.
இது வாழைத் தண்டின் சாறைப் பொடியாக்கி பிறகு மாத்திரையாக்கும் ஆய்வில்
இறங்கியுள்ளது.
வாழைத்தண்டு சாறானது சிறுநீரகக் கல்லை மட்டும் போக்குவதில்லை மாறாக அதிக
உடல் பருமன், அல்சர், அசிடிட்டி மற்றும் சர்க்கரை நோயையும் போக்க வல்லது.
ஆகவே இனி மக்கள் சாலையோரக் கடைகளில் விற்கும் வாழைத்தண்டுச் சாறையோ
அல்லது வீட்டிலேயே வாழைத்தண்டுச் சாறை கஷ்டப்பட்டுச் செய்யத் தேவையில்லை,
ஒரு மாத்திரை சாப்பிட்டால் போதும்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply