திருநெல்வேலி: குற்றாலம் சாரல் விழா ஆகஸ்ட் 2-வது வாரத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) கோ. சீனிவாசன் தெரிவித்தார்.
சாரல் விழாவிற்கான முன்னோடிக் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை தாங்கிய ஆட்சியர் மேலும் பேசியதாவது:
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் குற்றாலம் சாரல் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட வேண்டும்.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம், தென்னக கலை பண்பாட்டு மையம் மற்றும் சுற்றுலாத் துறை மூலம் கலை நிகழ்ச்சிகளை நடத்த சிறந்த கலைஞர்களின் பட்டியலை சம்பந்தப்பட்ட துறையினர் அனுப்பி வைக்க வேண்டும்.
இந்த ஆண்டு கால்நடைத் துறை மூலம் நாய்கள் கண்காட்சியும் நடத்தப்படும். மேலும், செஸ் போட்டி, பெண்களுக்கான இந்திய கலாசார ஆடை அலங்காரப் போட்டியும் நடத்தப்பட உள்ளது என்றார் அவர்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Good news