முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
எங்களது நோக்கம், நல்ல கிரிக்கெட் ஆடுவது - பிரெட் லீ!

எங்களது நோக்கம், நல்ல கிரிக்கெட் ஆடுவது - பிரெட் லீ!

இந்தியாவுக்கு கிரிக்கெட் ஆடவந்துள்ள பிரெட்லீ, “இந்தத் தொடர், நல்ல
நட்புறவை எங்களுக்குள் வளர்க்கும்” என்று நம்புவதாகத் தெரிவித்தார்.

இதற்கு முன் இரண்டு அணிகளும் மோதியதில் குறிப்பாக ஹர்பஜன்,
சைமண்ட்ஸ§டனும், ஹைடனுடனும் மோதிய பிரச்சனைகள் பெரிதாகக் கிளம்பின.

“ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி, இரண்டு நாட்டு அணிகளும் நன்றாகப் பழக
வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. எங்களது நோக்கம் நல்ல கிரிக்கெட்
ஆடுவது. நிச்சயம் அது நேறைவேறும்.

வார்னே, மெக்ராத், கில்கிறிஸ்ட் இப்போது எங்களுடன் இல்லையென்றாலும்
அவர்களுக்குப் பதிலாக புதிதாக இடம் பெற்றிருக்கும் இளம் வீரர்களும்
தகுதியானவர்களே.

டெண்டுல்கருக்கு நிகரான வீரர் உலகிலேயே கிடையாது. அவருக்கு பந்து வீசுவது
சவாலான விஷயம்தான். சமாளிப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

நான் இது வரை இந்தியாவுடன் டெஸ்ட் போட்டி ஆடியது கிடையாது ‘ஒரு நாள்’
‘20-20′ தான் ஆடியிருக்கிறேன்”.

இந்தப் போட்டிகள் சண்டை பூசல் இல்லாமல் அமைதியான போட்டியாக நடைபெறும்
என்று தான் நம்புவதாக தெரிவித்தார், ஆஸ்திரேலியா வீரர், பிரெட்லீ.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.