முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
‘2011 உலகக் கோப்பைப் போட்டியில் விளையாட விருப்பம்’ – டெண்டுல்கர்

மும்பை: வரும் 2011ம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் விளையாடுவேன் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாக சச்சின் டெண்டுல்கர் கூறியிருக்கிறார்.

இந்தியாவிற்காக உலகக் கோப்பையை வெல்லும் அணியில் தாம் இடம்பெறவில்லை என்ற இதுவரை நிறைவேறாத கனவை மெய்ப்பிக்க தாம் விரும்புவதாகவும் புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.

இடுப்பு வலியால் அவதிப்படுவதால் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 2, 3-வது டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியில் சச்சின் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2011ம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடுவேன் என்று உறுதியாகச் சொல்லமுடியாவிட்டாலும், தனக்கு அந்த நம்பிக்கை உள்ளது என்று கூறினார்.

உலகக் கோப்பையை வென்ற பிறகே தாம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2011-ம் ஆண்டு இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் இணைந்து நடத்தவிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் டெண்டுல்கர் பங்கேற்றால், 6-வது உலகக் கோப்பையில் பங்கேற்ற பெருமையை அவர் பெறுவார்.

-எஸ்.எஸ்






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.