இந்திய இலங்கை அணிகளுக்கிடையேயான 5 போட்டிகளுக்கான ஒரு நாள் போட்டித்
தொடர் நடக்கிறது. 3 போட்டிகள் நடந்து முடிந்துவிட்டன. அதில் 2
போட்டிகளில் இந்தியாவும் 1 போட்டியில் இலங்கையும் வெற்றி பெற்றது.
2 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் இந்த மேட்ச்சில் வெற்றி
பெற்றால்தான் தொடர் வெற்றி நிச்சயம் என்பதால் இந்தியர்கள் வெற்றி பெற
வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
இந்திய அணி முதலில் பேட் செய்ய ஆரம்பித்தது. அரைசதம் அடித்த கோஹ்லியின்
ஆட்டம் சிறப்பாக இருந்தது. ரெய்னாவும் டோனியும் தலா அரைசதம் அடிக்க
விறுவிறுவென ஏறியது, ரன் விகிதம். மொத்தமாக 258 ரன் எடுத்தது, இந்திய
அணி.
இலங்கையின் பந்து வீச்சாளார் துஷாரா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இவரது பந்து வீச்சு அபாரமாக இருந்தது. திரும்பவும் ஆடவந்த இலங்கை அணி 212
ரன்களில் ஆட்டமிழந்தது. இதில் சொல்லும்படி ஆடியது, ஜெயசூரியாவும்,
துஷாராவும்தான்!
முடிவில் 46 ரன்கள் வித்தியாசத்தில் அவர்களது சொந்த மண்ணிலேயே அவர்களை
வீழ்த்தியிருக்கிறது, இந்தியா. இப்பொழுது 3 போட்டிகளில் இந்தியாவும் 1
போட்டியில் இலங்கையும் வெற்றி பெற்றிருக்கின்றன. இன்னும் ஒரு ஒருநாள்
போட்டி நடக்க இருக்கிறது.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply