சமீபத்தில் ஜெர்மனியிலுள்ள ஸ்டுட்கர்ட் மாகாணத்தில் உதிங்க்டன் என்ற இடத்தில் வனவிலங்குப் பூங்காவில் ஒரு பகீர் சம்பவம் நடந்திருக்கிறது.
எப்போதும்போல் அன்றும் மலைப்பாம்பு இருக்கும் அந்த கூண்டை சுத்தம் செய்ய வந்தார், பெண் ஊழியர்.
அப்போது எதிர்பாராமல் அவர்மீது பாய்ந்த மலைப்பாம்பு அவரது தலையை வாயால் கவ்வி கொஞ்சம் கொஞ்சமாக இழுக்க ஆரம்பித்தது. அவர் இரண்டு கைகளால் பாம்பின் வாயை அகற்றியபடி உதவிக்கு அழைத்துக் கொண்டிருந்தார். மற்ற ஊழியர்கள் வந்து எவ்வளவு முயற்சித்தும் பாம்பு விடுவதாக இல்லை. அப்போது வனவிலங்கு அதிகாரிகளுக்கு சமயோசித யோசனை வந்தது. நீண்ட குழாய் மூலம் பாம்பின் வாயில் தண்ணீர் பீய்ச்சியடித்ததும் சட்டென அவர் தலையை விட்டது. தப்பித்தேன் பிழைத்தேன் என்று வெளியில் ஓடிவந்திருக்கிறார், அவர். தலை முழுவதும் பாம்பு கடித்திருப்பதால் சிகிச்சைக்கு அனுமதித்திருக்கிறார்கள். “பாம்புக்கு மனித வாடை பிடிக்கும். அதனால்தான் அந்த ஊழியரின் தலையை விடாமல் பிடித்திருந்தது. தண்ணீரை பீய்ச்சியடித்ததால் அதற்கு வாசனை உணர்ச்சி போய்விட்டது. தலையையும் விட்டுவிட்டது” என்கிறார்கள், அதிகாரிகள்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply