முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
தனித்து போட்டியிடும் தைரியம் தே.மு.தி.கவுக்கு மட்டுமே உண்டு - விஜயகாந்த்.

தனித்து போட்டியிடும் தைரியம் தே.மு.தி.கவுக்கு மட்டுமே உண்டு - விஜயகாந்த்.

தேசிய முற்போக்கு திராவிடக்கழக 4ம் ஆண்டு தொடக்க விழா, அண்ணா நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை முன்னிட்டு இளைஞர் அணி எழுச்சி மாநாடு சென்னை தீவுத்திடலில் நடந்தது. மாநாட்டில் தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தலைமை உரையாற்றினார்.

“இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படும்வரை, ஒரு சுமூக தீர்வு ஏற்படும் வரை நமது தொண்டர்கள் கறுப்பு பேட்ஜ் அணிய வேண்டும். நான் சொல்லும்வரை கழற்றக் கூடாது” என்றார். பிறகு அரசை ஒரு பிடிபிடித்தார். “இவர்கள் கவர்ச்சி திட்டத்தைதான் போடுகிறார்கள், வளர்ச்சித் திட்டங்களைப் போடுவதில்லை. தி.மு.க விற்கோ, அ.தி.மு.க.விற்கோ தனித்து போட்டியிடும் துணிவு இருக்கிறதா? தே.மு.தி.க.வுக்கு மட்டுமே அந்த தைரியமிருக்கிறது. இந்த தைரியத்துக்கு காரணம் நீங்கள்தான்” என்றார், கூட்டத்தைக் கைகாட்டியபடி. ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக  அந்தமானில் இருந்து கப்பல் மூலமாகவும், டெல்லியிலிருந்து விமானம் மூலமாகவும், மும்பையிலிருந்து ரெயில் மூலமாகவும் பல தொண்டர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். விஜயகாந்த் விமானப்படை, விஜயகாந்த் கப்பல் படை என்ற பெயர்களில் வாகனங்களை விமானம் போலவும் கப்பல் போலவும் வடிவமைத்துக் கொண்டு சென்றனர்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.