இந்திய தபால்துறை சார்பில் முகவரி அடையாள அட்டை வழங்கும் திட்டம் சென்னையில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்கான நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடந்தேறியது. தலைமை தபால்துறை தலைவர் இந்திரா கிருஷ்ணகுமார் முகவரி அடையாள அட்டை அறிமுகம் செய்துவைத்து பேசியபோது, “பாஸ்போர்ட், ரேஷன்கார்டு போன்றவை வாங்கும் போது முகவரி சான்று தேவைப்படுகிறது. அச்சமயங்களில் இந்த அட்டை உதவும். சென்னையில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து மற்ற மாவட்டங்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றார். இந்த அடையாள அட்டை பெற கட்டணமாக ரூ.250 செலுத்தியதும் தபால் துறை ஆய்வாளர்கள் வந்து ஆய்வு செய்வார்கள். ஒரு வாரத்தில் அட்டை வழங்கப்படும் வேறு எந்த சான்றும் தேவையில்லை. இது 3 ஆண்டு வரை செல்லும். பின்னர் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். முகவரி மாறினால் ரூ.50 செலுத்தி மாற்றிக் கொள்ளலாம். முதல் கட்டமாக சென்னை மற்றும் புறநகரங்களில் 94 தபால்துறை அலுவலகங்களில் இந்த அட்டைகளை பெற்று கொள்ளலாம்” இவ்வாறு சென்னை மண்டல தலைவர் எம்.எஸ்.ராமனாதன் கூறினார்.
மேலும் ஒரு நற்செய்தி :
தபால் நிலையங்களில் தங்க நாணயம் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் நாடு, டெல்லி, மகாராஷ்ட்ரா, குஜராத் ஆகிய நான்கு மாநிலங்களில் தபால் நிலையங்கள் தங்க நாணயம் விற்பனை செய்யப்படும். அரைகிராம், ஒரு கிராம், 5 கிராம், 8 கிராம் என்ற எடைகளில் கிடைக்கும் இந்த நாணயங்கள் மார்க்கெட் விலையைவிட மலிவாக இருக்கும் என்றும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றால் படிப்படியாக பல ஊர்களுக்கு விரிவுப்படுத்தப்படும் என்றும் மத்திய தொலைத் தொடர்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த நாணயங்களை ரிலையன்ஸ் மணி நிறுவனம் விநியோகிக்கிறது. சர்வதேச அங்கிகார சான்றிதழுடன் மூடி சீல் செய்யப்பட்ட உறையில் வைத்து விற்கப்படுகிறது.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply