முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
துவங்கியது ‘ஜீ’ தமிழ் சேனல்

துவங்கியது ‘ஜீ’ தமிழ் சேனல்

இந்திய மொழிகளில் 32 டி.வி.சேனல்கள் மூலம் கோடிக் கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்றிருக்கிறது, ‘ஜீ’ டி.வி. இந்தி, மராத்தி, பஞ்சாபி, பெங்காலி என்று உள்ளுரில் கொடி நாட்டியதோடு இந்திய தொலைக்காட்சியை வெளிநாடுகளிலும் அறிமுகம் செய்த பெருமை ‘ஜீ’டிவிக்கு உண்டு.
இத்தகைய பெருமைமிகு ‘ஜீ’ எண்டர்டெயின்மெண்ட் எண்டர்பிரைசஸ் எனும் இந்த நிறுவனம் இப்போது தமிழ் சேனலை இனிதே துவக்கியிருக்கிறது.
அரசியல், சினிமா, செய்தி, கல்வி, இலக்கியம், பாடல், ஓவியம், நடனம் என்று பல தரப்பட்ட மக்களும் விரும்பும் வகையில் நிகழ்ச்சிகளைத் தரவிருக்கிறது, ‘ஜீ’ டி.வி.
‘சரிகமப - சங்கீத மஹாயுத்தம்’ என்ற சங்கீத நிகழ்ச்சிக்கு டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவை நல்லெண்ணத் தூதராக நியமித்துள்ளனர். “இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடப்பது வரவேற்கத்தக்கது” என்கிறார், டாக்டர் பால முரளி  கிருஷ்ணா. அனைத்து நடிகர், நடிகைகளும் இசையமைப்பாளர்களும்  ‘ஜீ’டி.வி.க்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.