முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
‘டிரா’வில் முடிந்தது முதல் ஆட்டம்!

‘டிரா’வில் முடிந்தது முதல் ஆட்டம்!

பெங்களூருவில் நடைபெற்ற இந்திய ஆஸ்திரேலியர்களுக்கிடையிலான முதல் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி வெளிச்சம் இல்லாத காரணத்தால் தொடர்ந்து ஆடமுடியாமல் வெற்றி தோல்வியின்றி ‘டிரா’வில் முடிவடைந்தது.

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் 5 நாட்களாக நடந்த முதல் டெஸ்ட் மேட்சில் ‘டாஸ்’ஸை வென்று ஆடத் தொடங்கிய ‘ஆஸி’ அணி 430 ரன்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்க்ஸில் 360 ரன் எடுத்து ‘ஆல் ஆவுட்’ ஆனது.

முதல் இன்னிங்சில் 70 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 228 ரன் எடுத்து ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது.

299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது, இந்தியா. இந்தியா 177 ரன் எடுத்த நிலையில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்ததால் 10 ஓவர்களுக்கு முன்னதாக ஆட்டம் டிராவில் முடிவடைந்தது.

முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் எடுத்ததோடு, ஆட்டமிழக்காமல் 57 ரன் எடுத்த ஜாகீர்கான் ‘ஆட்டநாயகன்’ விருது பெற்றார்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.