சென்னை முகப்பேர் ஏரித் திட்டப் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டி முடிக்கப்பட்ட 170 வீடுகள் விற்பனை செய்யப் போவாக அறிவிக்கப்பட்டு அதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.
இந்த விண்ணப்பங்களில் இணைக்கப்பட்டிருந்த வரைவோலையைப் பிரித்து வங்கிக்கு அனுப்பி வைத்தனர், வீட்டுவசதி வாரிய ஊழியர்கள்.
வங்கி ஊழியர்கள் கண்டுபிடித்த பிறகு தான் அதில் 21 போலி வரைவோலைகள் இருந்தது தெரியவந்தது. ஒரு வரைவோலையை அப்படியே ஸ்கேன் செய்த இடைத்தரகர்கள் அதிலுள்ள எண்ணை மற்றும் மாற்றி கலர் ஜெராக்ஸ் எடுத்து விற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
எக்கச்சக்க விண்ணப்பங்கள் குவிந்து கிடப்பதால் தாமதமாகும் பணி, இந்த போலி வரைவோலைகளால் மேலும் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. இது குறித்து தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் முகப்பேர் கோட்டம் செயற் பொறியாளர் ராமகிருஷ்ணன், “அதிக விண்ணப்பங்கள் இருப்பதால் பணி சற்று தாமதமாகிறது. நிச்சயம் இம்மாத இறுதிக்குள் குலுக்கல் நடைபெறும்” என்றார்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply