முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
எய்ட்ஸ் கிருமிகள் குறித்த ஆய்வு செய்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு!

எய்ட்ஸ் கிருமிகள் குறித்த ஆய்வு செய்த 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு!

ஸ்டார்ஹோம் : இந்த ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு எய்ட்ஸ் நோய், கழுத்து எலும்பு புற்றுநோயை உருவாக்கும் வைரஸ் கிருமிகள் பற்றி ஆய்வு செய்த 3 விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படுகிறது.

பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இவ்வாண்டு ஜெர்மனியைச் சேர்ந்த ஹரால்டு ஜீர் ஹவுன், பிரான்சின் பிரான் கோயிஸ் பாரி சினோசி, மான்டேஜனியர் ஆகிய 3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இவர்கள் மனிதர்களிடம் எய்ட்ஸ் நோய் மற்றும் புற்றுநோய் ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகள் பற்றி மேற்கொண்ட ஆராய்ச்சிக்காக இப்பரிசு வழங்கப்படுகிறது.

நோபல் பரிசு மொத்தம் 14 லட்சம் டாலர்கள் அதாவது ரூ.6 கோடி. இதில் பாதியை ஹவுனும், மற்றொரு பாதியை பிரான்ஸ் விஞ்ஞானிகள் இருவரும் பெறுவது குறிப்பிடத்தக்கது.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.