சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ கல்லூரியில் ஈமு கோழி பண்ணை தொழிலுக்கான வாய்ப்புகள் பற்றிய ஒருநாள் கருத்தரங்கு நடைப்பெற்றது. கால்நடை உற்பத்தி மற்றும் மேலாண்மைத் துறை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பி.தங்கராஜீ தலைமை தாங்கி பேசினார். “ஈமு கோழியின் எண்ணெய் மிகவும் மருத்துவ குணம் கொண்டது அதன் தோல்களில் இருந்து அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. விவசாயம் மற்றும் சாதாரண இறைச்சி கோழி வளர்ப்புடன் ஈமு கோழியையும் சேர்த்து வளர்த்தால் விவசாயிகளுக்கு வருடம் முழுவதும் வருமானம் கிடைக்கும். நல்ல சுயவேலை வாய்ப்பும் கூட.
தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் ஈமு கோழி அதிகளவு வளர்க்கப்படுகின்றன. மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில் அதற்கு பதிலாக புரதசத்து மிகுந்த, குறைந்த கொழுப்புள்ள ஈமு கோழி இறைச்சியை சாப்பிடலாம்.
சிறிய அளவிலான ஈமு கோழி பண்ணை வைக்க 600 முதல் 800 சதுர அடி நிலம் தேவை. ஒரு கோழி குஞ்சு ரூ.2000 முதுல் ரூ.6000 வரை விற்கப்படுகிறது. ஈமு கோழி வளர்ப்பதற்கும் தீவனங்கள் தயாரிப்பதற்கும் புதுக்கோட்டை கால்நடை மருத்துவ பல்கலைக்கழக மண்டல ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுவதாகத் தெரிவித்தார். முன்னதாக முன்னாள் துணைவேந்தர் டாக்டர். ஞானபிரகாஷ், ஈமு கோழி வளர்ப்பு பற்றிய கண்காட்சியை துவக்கி வைத்தார். அதில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம், ஈமு கோழி தீவன தயாரிப்பு நிறுவனங்கள், காப்பீடு நிறுவனங்கள் என்று பல ஸ்டால்கள் இடம் பெற்றிருந்தன.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply