முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
அரசியலுக்கு வருகிறார் பாலகிருஷ்ணா!

அரசியலுக்கு வருகிறார் பாலகிருஷ்ணா!

ஹைதராபாத்: அரசியலில் குதிக்கவிருக்கிறார், பாலகிருஷ்ணா. எப்படியாவது பிரஜா ராஜ்ஜியம் முடக்கப்பட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள்.
தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு மருகனும், என்.டி.ஆரின் மகனுமான பிரபல நடிகர் பாலாகிருஷ்ணா கட்சியில் சேருகிறார். ‘இளைஞர்கள் கர்ஜனை’ என்ற பெயரில் இந்த மாத இறுதியில் குண்டுரில் தெலுங்கு தேசம் கூட்டம் நடத்துகிறது. இந்த கட்சியில் பால கிருஷ்ணா இணைகிறார். இந்த கூட்டத்தில் பாலகிருஷ்ணாவின் மருமகன்களும், நடிகர்களுமான கல்யாண் ராம், தாரசு ரத்னா மற்றும் ஜூனியர் என் டி ஆர் அனைவரும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். சமீபத்தில் ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி பிரஜா ராஜ்யம் என்ற பெயரில் புதுக்கட்சியைத் தொடங்கியிருந்தார். அவருடைய செல்வாக்கை உடைக்கும் வகையில் பல்வேறு கட்சிகள் பெரிய முக்கிய நடிகர்களை தங்கள் பக்கம் இழுத்து வருகிறார்கள்.அரசியல் பிரவேசம் பற்றி ரசிகர் மன்றத் தலைவர்களிடம் ஐதராபாத்தில் ஆலோசனை நடத்தினார், பாலகிருஷ்ணா.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.