“என்னை தலைவராகத் தேர்ந்தெடுத்ததற்காக பெருமைப்படுகிறேன்” என்று கூறிய ஸ்ரீகாந்த் இதன் மூலம் தனக்கு பொறுப்பு கூடியிருப்பதாகத் தெரிவித்தார்.
2011 உலகக் கோப்பையை பெறுவதற்கு திறமை மிக்க வீரர்களை தேர்வு செய்வேன். அதற்கு முன் உடனடியாக ஆஸ்திரேலியாவுடன் நடக்கவிருக்கும் போட்டியில் என் முழு கவனத்தையும் செலுத்துவேன்.
என்னுடன் பணியாற்றவிருக்கும், யஷ்பால் சர்மா, சுரேந்திர பாவே, ராஜா வெங்கட் மற்றும் நரேந்திர ஹிர்வானி மிகச் சிறந்த அனுபவமுள்ளவர்கள்.
எந்த பாரபட்சமுமில்லாமல் சிறந்த ஆட்டக்காரர்களைத் தேர்ந்தெடுப்போம். ஏனெனில் கிரிக்கெட் என்பது எல்லோராலும் கூர்ந்து கவனிக்கப்படும் விளையாட்டு. இதில் சிறிய தவறு நேர்ந்தாலும் அது பெரிய அளவில் பேசப்பட்டுவிடும். அதனால் மிகவும் கவனமுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு திறமைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார் இதற்கு முன் பதவியிலிருந்த வெங்சர்க்காரும் அவர் பணியை சிறப்பாகவே செய்திருந்தார்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply