முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
321-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சென்னை மாநகராட்சி!

321-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் சென்னை மாநகராட்சி!

வரும் 28-ம் தேதியுடன் சென்னை மாநகராட்சிக்கு 320 ஆண்டுகள் நிறைவு
அடைகிறது. 321-வது ஆண்டில் அடி எடுத்த வைக்க உள்ளது, சென்னை மாநகராட்சி.

1688, செப்டம்பர் 28ம் தேதி சென்னை மாநகராட்சி ஆங்கிலேயர்களால்
வடசென்னையின் ஒரு தனியார் கட்டிடத்தில் உருவாக்கப்பட்டது.

1913-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இப்போதையை மாநகராட்சி கட்டிடத்துக்கு அப்போதைய
வைசிராய் ரிப்பன் பிரபு நினைவாக ரிப்பன் மாளிகை என்ற பேர் சூட்டப்பட்டது
குறிப்பிடத்தக்கது.

சாரசனிக் கட்டிடக்கலையில் வடிவமைக்கப்பட்ட இக்கட்டிடத்தில்தான் தற்போது
மாநகராட்சி செயல்பட்டு வருகிறது.

சென்னை மாநகராட்சியின் கொடி சின்னத்தில் உள்ள புலி சோழ மன்னர்களையும்,
மீன் பாண்டி மன்னர்களையும், வில் சேர மன்னர்களையும், பாய்மரக்கப்பல்
சென்னை கடல் வாணிப துறைமுகத்தைக் குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.
பழுதடையாது ஓடும் பழங்கால கடிகாரங்கள் இக்கட்டிடத்தில்
பதிக்கப்பட்டுள்ளது.

321 வயதில் அடிஎடுத்து வைக்கும் 28ம் தேதி அன்று காலை 10:30 மணிக்கு அரிய
புகைப்படக் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“அமைச்சர் மு.க. ஸ்டாலின் இக்கண்காட்சியைத் தொடங்கி வைக்க உள்ளார். அதோடு
கவுன்சிலர்களுக்கு பல விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.”

அன்று மாலை 3 மணியளவில் கலைவாணர் அரங்கில் மாணவர்களின் கலை
நிகழ்ச்சிகளும், புஷ்பவனம் குப்புசாமி குழுவினரின் சிறப்பு நிகழ்ச்சியும்
நடக்க உள்ளது.

சிறப்பு மலரை வாழ்த்து அரங்கம் நிகழ்ச்சியில் மு.க. ஸ்டாலின் வெளியிட உள்ளார்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.