ஆஸ்திரேலியா : மன நிலையால் பாதிக்கப்பட்டுள்ளார் சைமண்ட்ஸ். அவர் திரும்பவும் பழைய நிலைக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆஸ்திரேலிய அணியினர்.
வங்கதேச அணி ஆஸ்திரேலியாவுடன் மூன்று ஒரு நாள் போட்டி விளையாட திட்டமிட்டு ஆஸ்திரேலியாவுக்குச் சென்றது. இந்தப் போட்டிகள் குறித்து கூட்டப்பட்ட கூட்டத்திற்கு அழைப்பு அனுப்பியும் வரவில்லை, சைமண்ட்ஸ். பயிற்சியிலும் கலந்து கொள்ளவில்லை.
இங்கு வராமல் அந்த நேரத்தில் டார்வின் கடற்கரையில் மீன் பிடித்துக் கொண்டு சந்தோஷமாக இருந்தாராம், சைமண்டிஸ். கடுப்படைந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு அவரை தொடரிலிருந்து நீக்கியது. அடுத்த மாதம் இந்தியாவில் நடக்க உள்ள டெஸ்ட் தொடருக்கான அணியிலும் சைமண்ட்ஸ் இருக்க மாட்டாராம்.
சைமண்ட்ஸ் சில நாட்களாகவே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளதாக ஒரு ஆஸ்திரேலிய பத்திரிகை செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
“ஐ.பி.எல் போட்டிகளை மனதில் வைத்து ஓய்வு பெற நினைக்கிறார், சைமண்ட்ஸ். பொருளதாரா கவர்ச்சிகளை உள்ளடக்கிய அந்த போட்டிகளெல்லாம் அவருக்கு தேவையில்லை. அவர் ஆஸ்திரேலியாவுக்கு மட்டும் ஆட வேண்டும். அதுதான் எங்களது ஆசை” என்கிறார் பிரபல ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டரான, வாட்சன்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply