முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
தத்தளிக்கிறது பீகார்!

தத்தளிக்கிறது பீகார்!

பீகார் :  தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மிகுந்த துன்பங்களுக்கு
ஆளாகியிருக்கிறது, பீகார்

‘பீகாரின் துயரம்’ என அழைக்கப்படும் கோசி நதியில் கடந்த இரண்டு வாரகாலமாக
வெள்ளம் கட்டுக் கடங்காமல் போய்க்கொண்டிருக்கிறது. ஆற்றின் திசைமாறி பல
இடங்களில் உடைப்பு ஏற்பட்டு கிராமங்கள் தண்ணீரினால் சூழப்பட்டு தீவுகளாக
இருக்கின்றன. இறப்பு எண்ணிக்கை 100ஐ தாண்டிவிட்டது.

‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரெயில்வே துறை நிவாரண நிதியிலிருந்து 90 கோடி
வழங்கப்படும்’ என அறிவித்துள்ளார் ரெயில்வே மந்திரி லாலுபிரசாத்.

‘தன்னுடைய ஒருமாத சம்பளம் மற்றும் டி.வி நிகழ்ச்சியின் மூலம் தனக்குக்
கிடைத்த 1 கோடி பணத்தையும் பீகாரின் பாதிக்கப்பட்ட மக்களுக்குத்
தருவதாகவும், 14 லட்சம் ரெயில்வே தொழிலாளர்களும் தங்களது ஒரு நாள்
சம்பளத்தை அளிப்பார்கள்’ என்றும் தெரிவித்தார்.

வெள்ள சேதத்தை விமானத்திலிருந்து பார்வையிட்ட பிரதமர் நிவாரணப் பணிகளை
மேற்கொள்ள முதற்கட்டமாக ரூபாய் ஆயிரம் கோடி ஒதுக்கப்படுவதாக
தெரிவித்தார். பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம்
வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.