முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
என்று தணியும் இந்த மத மோகம்?

என்று தணியும் இந்த மத மோகம்?

ஒரிசாவிலுள்ள ஐலேஸ்பேட்டையை சேர்ந்தவர் லஷ்மனானந்தா சரஸ்வதி. விஷ்வ இந்து பரிஷத்தின் தலைவராக இருக்கும் இவர் ஆதி திராவிடர்கள் மதம் மாறுவதைத் தடுக்கும் வகையில் போதனைகள் செய்து வந்தார். கிறிஸ்துவர்களாக மதம் மாறியவர்களைவும் இந்து மதத்துக்கு மத மாற்றம் செய்து வந்தார்.

ஒருநாள், திடீரென ஆசிரமத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் இவரையும் இவரது சீடர்கள் 5 பேரையும் கொன்று குவித்தனர்.

இதைத் தொடர்ந்து இந்தப் பகுதியில் கலவரம் வெடித்தது. கிறிஸ்தவர்களுக்கு சொந்தமான கடைகள், வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

நிலைமையைக் கட்டுப்படுத்த அதிரடிப்படையும் மத்திய ரிசர்வ் படையும் குவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் கிறிஸ்தவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். 30 ஆயிரம் கத்தோலிக்க கல்வி நிறுவனங்கள் ஒருநாள் மூடப்பட்டு தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தன. ‘இறைவன் இருப்பதோ மக்கள் மனதில் மக்கள் இருப்பதோ மத வெறியில்’ என்று எழுதப்பட்ட வாசகங்களை கையில் ஏந்தியபடி மனித சங்கிலி போராட்டங்களும் நடந்தன. கண்டனக் கூட்டங்களும் நடந்தன.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.