முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
ரயில் ‘இ-டிக்கெட்’, ‘ஐ-டிக்கெட்’ சந்தேகமா? 25300000 என்ற எண்ணைத் தட்டவும்!

ரயில் ‘இ-டிக்கெட்’, ‘ஐ-டிக்கெட்’ சந்தேகமா? 25300000 என்ற எண்ணைத் தட்டவும்!

சென்னை : ரயில் இண்டர்நெட் டிக்கெட், எலக்டரானிக் டிக்கெட் எடுப்பதில் சந்தேகம் இருப்பின், 25300000 என்ற தொலைபேசி எண்ணில் வாடிக்கையாளர் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம். இதற்கு முன்பு டெல்லி தொலைபேசி எண்ணுக்குப் போன் செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரயில்வேயில் 7 ஆண்டுகளுக்கு முன்பு இண்டர்நெட் முறை (ஐ-டிக்கெட்) அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த முறையில், இந்தியன் ரெயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேசன் (ஐ.ஆர்.சி.டி.சி மூலம் முன்பதிவு டிக்கெட் பதிவு செய்யலாம். பிறகு இண்டர்நெட் டிக்கெட் டெல்லியிலிருந்து வீட்டுக்கு கூரியரில் அனுப்பி வைக்கப்படும். கூரியர் வந்து சேர்வதில் பிரச்சினை ஏற்பட்டால் பயணம் தடைபடலாம்.

அடுத்து இ-டிக்கெட். ஓராண்டுக்கு முன்பு எலெக்ட்ரானிக் டிக்கெட்டிங் முறை அதாவது இ-டிக்கெட் அறிமுகம் செய்யப்பட்டது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தின் மூலம் முன்பதிவு டிக்கெட் பெற முடியும். டிக்கெட்டிற்கான பணம் ஏ.டி.எம் கார்டு அல்லது கடன் அட்டையிலிருந்து பெற்றுக் கொள்ளப்படும்.

இவ்வகை ‘இ-டிக்கெட்’, ‘ஐ-டிக்கெட்’ பற்றிய சந்தேகங்களுக்கு முன்பு டெல்லியைத்தான் தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால், இப்போது சென்னையின் வாடிக்கையாளர் மையத்தின் 25300000 என்ற எண்ணில் தொடர்பு கொண்டால் சந்தேகங்களுக்கு தமிழில் விளக்கம் பெறலாம். இந்த எண்ணில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தொடர்பு கொள்ளலாம். இதில் மாநில மொழிகள் மட்டுமல்லாது ஆங்கிலத்திலும் பதில் கிடைக்கும்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.