முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
கலவரப் படுத்தும் கள்ள நோட்டுகள்!

கலவரப் படுத்தும் கள்ள நோட்டுகள்!

புதுடெல்லி : போலி நோட்டுகளினால் புழக்கத்தால் ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை

சமீபகாலமாக போலி ரூபாய் நோட்டுகள் புழக்கம் பெரும் பிரச்சினையாக உள்ளது. கள்ள நோட்டுகளை பாகிஸ்தான் உளவு சதி அமைப்பான ஐ.எஸ்.ஐ. மிகவும் நேர்த்தியாகத் தயாரிப்பதால், அதை கண்டுபிடிப்பது மிகவும் சிரமமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர், வங்கி அதிகாரிகள்.

இந்தப் பிரச்சினையைத் தீர்க்க 1996 மற்றும் 2000ம் ஆண்டில் வெளியிடப்பட்ட 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களை புழக்கத்திலிருந்து அகற்ற தீர்மானித்துள்ளது, ரிசர்வ் வங்கி. இந்த நோட்டுகள் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டால் அவை மீண்டும் வினியோகத்துக்கு வராது. இந்த நோட்டுக்களை புழக்கத்திலிருந்து அகற்றுவதால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. இந்த ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட நோட்டுகளில் பாதுகாப்பு கோடுகள் மற்றும் நேர்த்தி ஆகியன சற்று குறைவு.

அதுவே 2006ல் வெளியிடப்பட்ட நோட்டுகள் மிகவும் பாதுகாப்பானவை. அதோடு, புதிய நோட்டுகளை அறிமுகப்படுத்தும் போது பழைய நோட்டுகளை அகற்றுவது உலக நடைமுறைதான் என்கிறார், வங்கியின் தகவல் தொடர்பாளர், அல்பனா கிலாவாலா






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.