புதுச்சேரி முதலமைச்சராக பதவி வகித்து வந்தார் ரங்கசாமி. இவர் தன்னிச்சையாக செயல்படுவதாக குற்றம் சாட்டி அவரை நீக்க வேண்டும் என்று மந்திரிகள் அனைவரும் மேலிடத்தில் வற்புறுத்தி வந்தனர்.
இந்நிலையில் மேலிட உத்தரவுப்படி எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலானவர்கள் ரங்கசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள். இதனால் அவரை ராஜினாமா செய்யும்படி உத்தரவிட்டது, மேலிடம்.
அந்த உத்தரவைத் தொடர்ந்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தப் பின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார், ரங்கசாமி. அப்போது அவர் கண்கள் கலங்கியிருந்தது.
இதைத் தொடர்ந்து கட்சி தொடர்பாக தான் தேர்ந்து எடுக்கப்பட்டதற்கான கடிதத்தைக் கொடுத்து தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கவர்னரிடம் கேட்டுக் கொண்டார், வைத்திலிங்கம்.
புதிய அமைச்சரவை 1ம் தேதி பதவி ஏற்கக் கூடும் என்றும் வைத்திலிங்கத்துடன் 5 அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள் என்றும் கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறினார்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply