முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
இனி இரயில் பயணங்கள் அலுக்காது!

இனி இரயில் பயணங்கள் அலுக்காது!

புதுடெல்லி : இனி ரயில்களிலும் பணிப்பெண்கள், நொறுக்குத்தீனி, இண்டர்நெட், தொலைக்காட்சி என்று விமானத்தைப் போலவே அனைத்து வசதிகளும் வர உள்ளது.

ரயில்வே அமைச்சகம் ரயில் பயணங்களை விமானப்பயணம் போல மாற்ற வேண்டும் என்று திட்டமிட்டுள்ளது.

இதற்காக ரயில்களில் பயணிகளுக்குச் சேவை செய்ய பணிப்பெண்களை நியமிப்பது குறித்து தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.

இதற்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் கொடுத்து விட்டால் செப்டம்பர் மாதத்திலிருந்து சில தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்களில் பணிப்பெண்கள் பணியில் அமர்த்தப்படுவர். அவர்கள் பயணிகளுக்குத் தேவையான காபி, டீ, நொறுக்குத்தீனி மற்றும் உணவு வகைகளை வழங்குவர்.

இதமான மெல்லிய இசை மட்டுமல்லாமல் ரயில்களில் ‘இண்டர்நெட்’, ‘டிவி’ பார்க்கும் வசதியும் இருக்கும்.

நீல நிற கால் அங்கி மற்றும் வெள்ளை நிற சட்டை மற்றும் மேல்சட்டைகள் (பிளேசர்கள்) அணிந்து ரயில் பணிப்பெண்கள் சேவை செய்வர்.

பொதுத்துறை மற்றும் தனியார் துறை பங்களிப்பில், இந்திய ரயில்வேயில் முதன்முறையாக இத்திட்டம் அமலுக்கு வர உள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் பேசுகையில், “சிறந்த முன்னோடி திட்டமான இது, முதலில் ‘கஞ்சன் கன்யா எக்ஸ்பிரஸ்’ மற்றும் ‘மேற்கு வங்க எக்ஸ்பிரஸ் ரயில்’ களில் அறிமுகமாகும். செப்டம்பர் 20 முதல் இண்டர்நெட், தொலைக்காட்சி வசதி அறிமுகப்படுத்தப்படும்” என்றார்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.