முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
டீ குடி, வண்டி ஓட்டு!

டீ குடி, வண்டி ஓட்டு!

காஞ்சிபுரம் :  காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் அதிகாலையில் ஏற்படும் விபத்துகளை தடுக்க
ஓட்டுநர்களுக்கு டீ கொடுக்கும் புது திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

காஞ்சிபுரம் வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலைகள் நான்கு
வழிப்பாதையாக உள்ளதால் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்கின்றன.

அதிகாலை நேரங்களில் ஓட்டுநர்கள் மிகவும் களைப்போடு வாகனங்களை ஓட்டும்போது
அதிக விபத்துக்கள் ஏற்படுவதாக போலீசார் நடத்திய ஆய்வின் போது
தெரியவந்துள்ளது. இது போன்ற விபத்துக்களைத் தடுக்க காஞ்சிபுரம் போலீசார்
புது திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ஸ்ரீ பெரும்புதுதூர் அடுத்த தேசிய நெடுங்சாலையில் உள்ள வாகன சோதனை
சாவடிகளின் அருகே எஸ்.பி. பெரியய்யா தலைமையில், சாலையில் செல்லும்
வாகனங்களை நிறுத்தி ஓட்டுனர்களுக்கு முகம் கழுவ தண்ணீர் வழங்கினர்,
போலீசார். பிறகு நாற்காலில் அமர வைத்து சூடான டீ குடிக்க கொடுத்தனர்.
ஓட்டுனர் உற்சாகமடைந்த பிறகு போக்குவரத்து விதிமுறைகளை விளக்கி கூறினார்,
எஸ்.பி பெரியய்யா.

‘வாகனம் ஓட்டும் போதும் உறக்கம் வந்தால் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு
சிறிது நேரம் ஓய்வெடுத்தபின் செல்ல வேண்டும். இலவசமாகக் கொடுக்கப்படும்
தேநீரைக் குடித்து களைப்பைப் போக்கிக் கொண்ட பின் திரும்பயும் ஓட்ட
ஆரம்பிக்க வேண்டும். பயணிகள் தங்களை நம்பித்தான் பயணம் செய்கிறார்கள்
என்பதையும் கவனத்தில் கொண்டு பேருந்தை கவனமாக ஓட்ட வேண்டும்’ என்று
அறிவுரை வழங்கினார்.

இந்த திட்டம் ஓட்டுனர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.