முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
புதுடெல்லி : காப்பீடு நிறுவனங்களுக்கு உயர்நீதி மன்றம் கடும் கண்டனம்

புதுடெல்லி : காப்பீடு நிறுவனங்களுக்கு உயர்நீதி மன்றம் கடும் கண்டனம்

காப்பீட்டு நிறுவனங்களின் கடமை என்ன?

விபத்துக்களில் காப்பீடு தொகையை அளிக்கும் உத்தரவு மீது கால தாமதம் செய்யும் காப்பீடு நிறுவனங்களுககு டெல்லி உயர்நீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் சாலை விபத்து ஒன்றில் படுகாயமடைந்து நிரந்தர ஊனமானார். ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் அவர் செய்திருந்த விபத்து காப்பீடு மீது 3 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு விண்ணப்பித்தார். அதை தரமறுத்தது, காப்பீடு நிறுவனம். அதைத் தொடர்ந்து, வாகன விபத்து காப்பீடு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்தார். அதில் சந்தோஷ் குமாருக்கு 3 லட்ச ரூபாய் இழப்பீடு தர காப்பீடு நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து அந்த காப்பீடு நிறுவனம் டெல்லி உயர் நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தது. முறையான ஒட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டியிருக்கிறார் என்று நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி, ‘சந்தோஷ் குமாரிடம் முறையான ஓட்டுனர் உரிமம் இருந்ததை எம்.ஏ.சி.டி உறுதி செய்துள்ளது. ஆகவே அவருக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உறுதி செய்கிறது. மேலும் பாலிசி எடுத்தவர் விபத்தில் சிக்கிய பிறகு இழப்பீடு தராமல் மேல் முறையீடு செய்து வழக்கை இழுத்தடித்த தற்காக காப்பீடு நிறுவனத்துக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்’.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.