சிஎம்டிஏ வில் கட்டிட அனுமதிக்காக விண்ணபித்துக் காத்திருக்கும் விண்ணப்பதாரர்கள், தங்களின் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை இனி இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
சென்னை மற்றும் அதனைச் சுற்றி உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு மாடிக் கட்டிடத்துக்கும் அதிகமாக அதாவது 2 மாடி கட்டிடங்கள் மற்றும் அதற்கும் உயராமான கட்டிடங்களை கட்ட வேண்டுமெனில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திடம் (சிஎம்டிஏ) அனுமதி பெற வேண்டும். இதற்கு கட்டிட வரைபடத்துடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கப் பெற வேண்டும்.
அதன் பிறகு அனுமதி கிடைக்க பல மாதங்கள் ஆவதாக புகார் உள்ளது. இதனை சரிபடுத்த சிஎம்டிஏ பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி திட்ட அனுமதிக்காக காத்திருக்கும் விண்ணப்பதாரரை நேர்காணலுக்கு அழைத்து உடனடி அனுமதி தரும் திட்டத்தை சிஎம்டிஏ சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில் இன்று (வியாழக்கிழமை) விண்ணப்பதாரர் தமது விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை இணையதளம் மூலம் உடனே தெரிந்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்துகிறது.
கட்டிட அனுமதி கேட்டு விண்ணப்பிக்கும் போதே ஒரு ரகசிய குறியீட்டு எண் வழங்கப்படும். அவர்கள் சிஎம்டிஏவின் இணையதளத்தில் அந்த ரகசிய எண்ணை வைத்து தங்களின் விண்ணப்பத்தின் நிலையை அறிய முடியும்.
இந்த வசதியை அமைச்சரும், சிஎம்டிஏ தலைவருமான பரிதி இளம்வழுதி இன்று தொடங்கி வைக்கிறார்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply