முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
இலவச முகாம் நடத்த அரசு அனுமதி அவசியம்

இலவச முகாம் நடத்த அரசு அனுமதி அவசியம்

விழுப்புரம் : இனி இலவச மருத்துவ முகாம் நடத்துவதாக இருந்தால் சுகாதாரப்பணித்துறை இயக்குநரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.

இலவச கண் சிகிச்சை முகாம் என்ற பேரில் பலருக்கு கண்பார்வை பறிபோன அவலம் சமீபத்தில் அரங்கேறியுள்ளது.

இந்நிலையில், சுகாதாரப் பணி துணை இயக்குநர் எடுத்துள்ள செய்திக் குறிப்பின் படி இனி சுகாதாரம் தொடர்பான எந்த முகமாக இருந்தாலும் மருத்துவ முகமாக இருந்தாலும் தனியாரின் பங்களிப்போடு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் உதவியோடு நடந்தாலும், மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் உரிய முன் அனுமதி பெற வேண்டும்.

இவ்வாறு முன் அனுமதி பெற்ற பிறகே மருத்துவ முகாம், இலவச கண் சிகிச்சை முகாம், இலவச தடுப்பூசி போடும் முகாம், இலவச தோல் நோய் கண்டறியும் முகாம், எய்ட்ஸ் நோய் கண்டுபிடிக்கும் முகாம்கள் நடத்த வேண்டும்.

பொதுமக்களும் எங்கு இலவசமுகாம் நடந்தாலும், அதற்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்த பிறகே சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.

அரசின் அனுமதி பெற வேண்டும் என்று இந்த கண்டிப்பு பாராட்டத்தக்கது.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.