முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
தொடருகிறது மின்வெட்டு!

தொடருகிறது மின்வெட்டு!

சென்னை உள்ளிட்ட மாநகர் பகுதிகளில் மீண்டும் மின்வெட்டு
அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும்
அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.

‘காற்றாலையில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு அதிகரித்து,
தனியார் மற்றும் மத்திய தொகுதியிலிருந்து கூடுதலாக மின்சாரம்
பெறப்படும்போது மின்நிலை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்கிறது,
மின்வாரியம்.

பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் அணைகளின் நீர் இருப்பு உயர்ந்தது.
இதனால் நீர் மின்சாரமும் காற்றாலை மின்சாரமும் அதிகரித்தது. இதனால் மின்
வெட்டினை தளரத்தியது, மின்வாரியம்.

மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனால் திரும்பவும் இப்போது பழைய
நிலைமையே நீடிக்கிறது.

‘முன்பெல்லாம் காலை நேரத்தில் காற்றின் வேகம் குறைவாகவும், மாலையில்
அதிகமாகவும் இருந்தது. இப்பொழுது நாள் முழுவதும் ஒரே சீராக இருக்கிறது
இந்த நிலையும் பற்றாக்குறைக்குக் காரணம்’ என்கிறார்கள், மின்வாரிய
அதிகாரிகள்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.