முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
பார்வை பறிபோனதற்குக் காரணம் சொட்டு மருந்துகளா!

பார்வை பறிபோனதற்குக் காரணம் சொட்டு மருந்துகளா!

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே கருவனூர் கிராமத்தில் ஊராட்சி
சார்பில் கடந்த மாதம் 28ம் தேதி இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
இதில் தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு கண் அறுவை சிகிச்சை நடந்தது.

இந்த அறுவை சிகிச்சைக்குப் பிறகு 45 பேரின் பார்வையும் பறிபோனது என்ற
விஷயம் தமிழ்நாட்டையே உலுக்கி எடுத்தது.

பார்வை பறிபோனதற்குக் காரணம் சொட்டு மருந்துகளா என்பதைக் கண்டறிய அவை
சோதனைக் கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. முடிவு தெரியும் வரை அந்த
மருந்தின் பயன்பாட்டை நிறுத்தி வைக்கவும் உத்தரவிடப் பட்டுள்ளது.

இலவச கண் சிகிச்சை முகாம் நடத்த மாவட்ட கலெக்டரிடம் முன் அனுமதி பெற
வேண்டும். பார்வை இழப்பு தடுப்பு சங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.
இவர்கள் இந்த விதிமுறைகள் எதையும் பின்பற்றவில்லை. அதோடு போதிய வசதி
இல்லாத ஒரு கிராமத்தில் நடத்தியதும் தவறு.

முழுமையாக பார்வை இழந்தவர்களுக்கு ரூ.5லட்சமும், ஒரு கண்ணில் மட்டும்
பார்வை இழந்தவர்களுக்கு ரூ.1லட்சமும் வழங்கப்படும் என தமிழக முதல்வர்
அறிவித்திருக்கிறார்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.