முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
நல்ல முயற்சி!

நல்ல முயற்சி!

புதுடெல்லி : செய்தி சேனலான என்.டி.டி.வி, மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் சேர்ந்து “இந்தியாவின் 7 அதிசயங்கள்” என்ற திட்டத்தின்படி இந்தியாவின் புதிய தரைச் சின்னங்கள் மற்றும் வரலாற்றுப் பொக்கிஷங்களை அறிய உள்ளது.

ஒரு வருட காலம் நடக்கும் இப்பணியின்படி இயற்கையான மற்றும் செயற்கையான சிறப்பான 7 அதிசயங்கள் அறியப்பட உள்ளது.

இது குறித்து என்.டி.டி.வி சேர்மன் ப்ரணாய் ராய் பேசுகையில், “இத்திட்டத்தின் நோக்கமே உள்நாடு மற்றும் வெளிநாடு சுற்றுலாப் பயணிகளுக்கு நம் நாட்டின் விலைமதிப்பற்ற கலாச்சாரத்தைப் பறைசாற்றுவதுதான். இதன்படி நாட்டில் மூலை முடுக்கில் உள்ள புதிய இடங்களைப் பற்றிய செய்திகளும் கண்டறியப்படும். அதோடு  நமது 5,000 ஆண்டு பழமையான கலாச்சாரம் உலகெங்கும் சென்று அடையும்” என்றார்.

மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கர்நாடகம் மற்றும் அனைத்து மாநில மக்களிடமும் அவரவர் மாநிலத்தில் சிறப்பான 7 அதிசயங்கள் பற்றி கேட்டறியப்படும்.

மக்கள் தங்கள் கருத்துக்களை இ-மெயில் மற்றும் குறுந்தகவல் வழியாகவும் அனுப்பலாம்.

இந்த சிறப்பான இடங்கள் என்.டி.டி.வி சேனல்களில் செப்டம்பரிலிருந்து ஒளிபரப்படும்” என்றார்.

இவ்விழாவில் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் அம்பிகா சோனியும் கலந்து கொண்டார்.

ஒவ்வொரு மாதமும் 7 சிறந்த இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அவை அகில இந்திய தேர்வுக்கு தாக்கல் செய்யப்படும்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.