ஆந்திரா : தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, திருப்பதியில் ‘பிரஜா ராஜ்யம்’
என்று தனது புதுக் கட்சியின் பெயரை 10 லட்சம் ரசிகர்கள் முன்னிலையில்
அறிவித்தார்.
அலை கடலென திரண்டிருந்த மக்களால் திருப்பதியே திக்குமுக்காடியது. மாலை
5:30 மணிக்கு (8 அவருக்கு ராசியான எண்ணாம்!) சுறுசுறுப்பாக மேடைக்கு வந்த
சிரஞ்சீவி கட்சியின் பெயரை அறிவிப்பதற்குமுன் சிறிது சஸ்பென்ஸ் வைத்தார்.
பிறகு ‘பிரஜா ராஜ்யம்’ என்று உரத்தக் குரலில் கூறி முடிக்குமுன் அவர்
பின்புறம் இருந்த பிரமாண்ட திரையில் ‘பிரஜா ராஜ்யம்’ என்ற பெயர்
தெலுங்கில் வான வேடிக்கையுடன் வந்தது. ரசிகர்களின் கரவொலி விண்ணைப்
பிளந்தது.
“இது மக்களின் கட்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பெயர்
வைத்துள்ளேன். எனது 30 வருட கால சினிமா வாழ்க்கை நேற்றுடன்
முடிந்துவிட்டது. சினிமாவில் வளர்த்தது போல அரசியலிலும் நீங்கள்தான்
என்னை வளர்க்க வேண்டும். உங்களுக்காக உழைக்கத் தயாராக இருக்கிறேன்.
எனக்கு கஞ்சி குடிப்பதின் கழ்டமும் தெரியும் பென்ஸ் காரில் சவாரி
செய்யும் சுகமும் தெரியும்.
அன்னை தெரசாவைப் போல் நான் சேவை செய்வேன். லஞ்சத்தை ஒழிப்பேன், கல்வி,
மருத்துவம், தொழிற்சாலைகளில் பல நல்ல திட்டங்களைக் கொண்டு வந்து ஆந்திர
மாநிலத்தை தன்னிறைவு அடையச் செய்வேன்” என்றார்
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply