தமிழ்நாடு முழுவதும் 3300 பெட்ரோல் பங்குகள் உள்ளன. அதிகரித்து வரும் வாகனங்களால் எரிபொருள்களின் பயன்பாடு சுமார் 40% அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விற்பனையில் ஈடுபட்ட பல தனியார் நிறுவனங்கள் நஷ்டம் காரணமாக மூடப்பட்டுவிட்டதால் வாகன ஓட்டிகள் அனைவரும், இந்திய அரசு எண்ணை நிறுவனங்களின் டீலர்களையே நாடிவரும் நிலைக்கு தள்ளப் பட்டிருக்கின்றனர்.
இது குறித்து பேச்சு வார்த்தை, தமிழ் நாடு பெட்ரோலியம் டீலர்கள் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் மாநிலத் தலைவர் கண்ணன் தலைமையில் நேற்று சேலத்தில் நடைபெற்றது.
அதன் படி தமிழகம் முழுவதும் பெட்ரோல் பங்குகளின் வேலை நேரத்தைக் குறைக்க சங்க பொதுக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஞாயிறு விடுமுறை எனவும் மற்ற நாட்களில் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பங்குகள் திறந்திருக்கும் எனவும் தெரிவித்தார்.
இது செப்டம்பர் மாதம் 15ம் தேதியிலிருந்து அமலுக்கு வரும் என எதிர்பார்க்ககப்படுகிறது.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply