முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலம்!

பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலம்!

செப்டம்பர் 3ம் தேதி வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி, தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்பட இருக்கிறது.

விநாயகர் சதுர்த்தி தினத்தைத் தொடர்ந்து பத்து நாட்களும் சிறப்பு வழிபாடு, பூஜைகள் கோலாகலமாக நடை பெற உள்ளன. கொண்டாட்ட முடிவில் விநாயகரை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைப்பது வழக்கம்.

வீடுகளில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடியவர்கள் கூட மறுநாள் அந்த சிலையை கோயிலில் வைத்து விடுவர்.

கோயிலிலிருந்து சிலைகள் எடுத்துச் செல்லப்படும்போது இவற்றையும் எடுத்துச் செல்வர்.

முந்தைய ஊர்வலங்களில் ஏற்பட்ட சில மனக்கசப்பான நிகழ்வுகளால் இந்த முறை பாதுகாப்பாக கொண்டாட முடிவெடுத்திருக்கிறது அரசு. விநாயகர் சிலையைக் கரைக்க 5 இடங்களில் இடம் ஒதுக்கியுள்ளன. இதன் படி பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடைக்கு பின்புறம், திருவொற்றியூர் யூனிவர்சல் கம்பெனிக்கு பின்புறம், நீலாங்கரை பல்கலை நகர் மற்றும் எண்ணுர் ராம கிருஷ்ணா நகரிலும் விநாயகர் சிலையைக் கரைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.