நடுத்தர வர்க்கத்தினரும் கார் வாங்கலாம் என்ற நம்பிக்கையைத் தந்தது, டாடாவின் ‘நானோ’ கார் திட்டம். இந்த ஆண்டு அக்டோபரில் நானோ சாலைகளில் வலம் வரும் என அறிவித்திருந்தார், ரத்தன் டாடா. இப்போது, அந்த திட்டத்தைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கும் என்று மனவருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.
மேற்கு வங்கத்திலுள்ள சிங்கூரில்தான் டாடாவின் கார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. ‘இந்த தொழிற்சாலை அமைக்க கையகப்படுத்தப்பட்ட நிலத்தை சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் இம்மாதத்திற்குள் திரும்ப அளிக்க வேண்டும். அப்படி செய்யவில்லையெனில் போராட்டம் நடத்தப்படும்’ என்று அறிவித்துள்ளர், திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி.
தொழிற்சங்கக் கூட்டத்தில் இதற்கு பதிலளிக்குமாறு பேசிய ரத்தன், “இவ்வளவு பிரச்சினைகளுக்கிடையில் நமது திட்டம் நிறைவேறுமா என்று தெரியவில்லை. ஒப்பந்த அடிப்படையில்தான் நிலத்தை வாங்கியிருக்கிறோம். அப்படியிருந்தும் இந்த திட்டத்திற்கு ஏன் முட்டுக்கட்டை போடுகிறார்கள் என்று தெரியவில்லை. அதோடு தொடர்ந்து நம் பணியாட்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த வன்முறை தொடர்ந்தால் எங்களின் தொழிலாளர் நலன் கருதி சிங்கூரை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். அப்படி வெளியேறும் பட்சத்தில் இனி மேற்கு வங்கத்தில் எங்கள் அடுத்த முதலீடுகளைப் பற்றி யோசிக்க வேண்டியிருக்கும். மேற்கு வங்க மக்கள்தான் இதற்கு சரியான தீர்ப்பளிக்க வேண்டும்’ என்று அதிரடியாக அறிவித்து விட்டார். இந் நிலையில், மகாராஷ்டிராவில் அவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருவதாகச் சொல்லி அங்கு தொழில் தொடங்க அழைப்பு விடுத்திருக்கிறார், மகாராஷ்டிர முதல்வர், விலாஸ்ராவ் தேஷ்முக்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply