டில்லி : சிலிண்டர்களில் ரேடியோ அலைவரிசை ‘சிப்’கள்
வீடுகளின் அத்தியாவசியத் தேவைகளில் காஸ் சிலிண்டரும் ஒன்று. காஸ் இல்லாமல் சமைப்பது இந்தக் காலப் பெண்களுக்கு முடியாத ஒன்று.
காஸ் தீர்ந்து விட்டது என்பதைத் தெரிவிக்க அந்த ஏஜென்சியுடன் தொடர்பு கொண்டால் முதலில் இணைப்பு கிடைப்பதே குதிரைக் கொம்பான விஷயம்.
மீறி இணைப்பு கிடைத்து விட்டாலும் ஒருவாரம் பத்து நாளில் அனுப்புவதாக சொல்வார்கள்.
பதினோராவது நாள் தொலைபேசியில் தொடர்பு கொண்டால், “உங்கள் வீட்டுக்கு காஸ் அனுப்பி 4 நாள் ஆகிறதே” என்று சர்வசாதாரணமாகச் சொல்லுவார்கள்.
நம் வீட்டுக்கு வராத காஸ் எங்கு சென்றது என்று பார்த்தால் ஏதாவது உணவ விடுதிகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கும். காரணம் வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தப்படும் காஸ் சிலிண்டர்களை விட சமையல் சிலிண்டர்களின் விலை ரூ.349 குறைவு.
இந்த ஊழலைத் தடுப்பதற்காக, சிலிண்டர்களில் ரேடியோ அலைவரிசை சிப்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சிலிண்டர் பயன்படுத்துவேருக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். சிலிண்டர் டெலிவரி செய்யும் போது ஸ்மார்ட்கார்டில் சிலிண்டரின் எண் பதிவாகிவிடும். இப்படி செய்வதன் மூலம் காஸ் சிலிண்டர் வீட்டு பயன்பாட்டுக்குதான் உபயோகப்படுத்தப்பட்டதா என்று தெரிந்துவிடும்.
டெல்லியில் டிசம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்படும் இந்த புதிய திட்டம் படிப்படியாக நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply