புதுடெல்லி : நாய்களுக்கு எது சரி, எது தவறு என்பது தெரியும் என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதுவரை நாய் நன்றியுள்ளது என்பதை மட்டுமே அறிந்திருந்தோம். இப்போது நாய்கள் பற்றி இந்த செய்தி ஆச்சரியமாக உள்ளது அல்லவா.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில், நாய்கள் தொடர்பான அறிவியல் மாநாடு நடந்தது. இதில்தான் ஆய்வாளர்கள், நாய்களின் அறிவு குறித்த அறிவியல் உண்மைகளை வெளியிட்டனர்.
நாய்களுக்கு மனசு உள்ளது. இதுவே அவை சரி, தவறு என்று தேர்ந்தெடுக்க வழிவகுப்பதாக லியன்னா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இதுவே நாய்களின் சண்டை எல்லை தாண்டாமல் போவதற்குக் காரணமாம். இதே போல் சமூக ஒழுங்கு முறையை கடைப்பிடிக்கும் நாய்கள் மற்றவர்களும் அதையே பின்பற்ற வேண்டும் என்று நினைக்கின்றதாம்.
இந்த அறிவின் காரணமாகவே அவற்றால் மனிதர்களுடன் சேர்ந்து வாழ முடிகிறதாம். இனி நாய்களுக்கு நன்றியுள்ள நாய் என்தோடு அறிவான நாய் என்றும் புகழாரம் சூட்டலாம்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply