புதுடெல்லி : மத்திய அரசு, கள்ள நோட்டுக்களின் புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த பரிசீலனை செய்து வருகிறது.
ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே பிளாஸ்டிக் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆகவே இது குறித்த தொழில்நுட்பத்தை வழங்கக் கோரி அந்நாட்டு அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுப்பது குறித்து பரிசீலனை நடந்து வருகிறது.
இது குறித்து ஒரு உயர் அதிகாரி பேசுகையில், “பாலிமரில் அச்சடிக்கப்படும் ஆஸ்திரேலிய கரன்சிகள் தனித்தன்மை கொண்டவை, காகித கரன்சியை விட சற்று தடிமனாக இருக்கும் இவற்றைப் போலியாக தயாரிக்க முடியாது என்பதே இதன் சிறப்பு அம்சம்” என்றார்.
காகித நோட்டுகள் போல ப்ளாஸ்டிக் நோட்டுகள் எளிதில் அழுக்காகாது, அதோடு எளிதில் கிழியவும் செய்யாது. ப்ளாஸ்டிக் நோட்டுகள் நான்கு மடங்கு உழைக்கும் என்பதால் அரசுக்கு சிக்கனமாக இருக்கும்.
காகித நோட்டுகளுக்காக மரங்களை வெட்டுவதன் மூலம் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. ஆனால் பிளாஸ்டிக் நோட்டுகளால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித விளைவும் ஏற்படாது என்கிறது அரசு வட்டாரங்கள்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply