முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
பிரமாதப்படுத்திவிட்டது, பீஜிங்!

பிரமாதப்படுத்திவிட்டது, பீஜிங்!

பீஜிங்கில் 29வது ஓலிம்பிக் சிறப்புடன் நடந்து முடிந்தது. நிறைவு விழாவில் ஏராளமான கலைஞர்கள் பங்கேற்று சாகசங்களை நிகழ்த்தினர். அந்தரத்தில் மிதந்தபடி டிரம்ஸ் இசைக்கச்சேரி மற்றும் அவர்களின் சீனப் பெருஞ்சுவரை நாட்டியத்தின் மூலம் காட்டிய பாங்கு என்று எத்தனை இடர்பாடுகள் இருந்தாலும் அனைத்தையும் எதிர்கொண்டு சமாளித்து தாங்கள் கெட்டிக்காரர்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள்.

51 தங்கம் வென்று சாதனை படைத்திருக்கிறது சீனா. பதக்கம் வெல்ல தவறியவர்கள் கூட ஒரு சிறிய நூலிழையில்தான் அந்த பதக்கத்தை கை நழுவ விட்டிருக்கிறார்கள்.

204 நாடுகள் பங்கேற்றன. அதில் கலந்து கொண்ட வீரர் வீராங்கனைகள் 11,028 பேர். இதில் நம் இந்தியாவுக்கு ஒரு தங்கமும் 2 வெண்கலமும் கிடைத்தது.

விழாவின் இறுதியில், இந்தியாவின் சார்பில் வெண்கலம் வென்ற குத்துச் சண்டை வீரர் விரேந்தர குமார் தேசியக் கொடியை ஏந்திச் சென்றார்.

விழாவின் சிறப்பம்சமாக சிவப்பு நிறத்திலான இரட்டை மாடி பஸ் ஒன்று அரங்கத்திற்கு வந்தது. அதிலிருந்து இறங்கிய லண்டன் சிறுமி, சீன சிறுமியிடருந்து கால் பந்தை வாங்கிக் கொண்டு திரும்பவும் பஸ்ஸினுள் ஏறிக் கொண்டாள்.

கால் பந்து வீரர் பெக்காம் பஸ்ஸின் மேல் நின்று கொண்டு பந்தை ரசிகர்களை நோக்கி உதைத்தார். விழாவின் இறுதியில் ஒலிம்பிக் கொடியை சீன மேயர் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவரிடம் ஒப்படைக்க அவரிடமிருந்து லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன் பெற்றுக் கொண்டார்.

இனி 2012 லண்டனில் தான் அடுத்த ஒலிம்பிக்!






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.