சென்னை : தமிழகத்தில் ஐ.டி நிறுவனங்களின் பெருக்கம் காரணமாக டீசல் தேவை 35% அதிகரித்துள்ளது என்று தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் டீசல் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஆகவே டீசலை அதிகம் உபயோகிக்கும் சாப்ட்வேர் நிறுவனங்கள், ஜவுளி ஆலைகள், இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்களுடன் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அதன் பிறகு நடந்த பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசிய தலைமைச் செயலாளர், “கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் 35% டீசல் தேவை அதிகரித்துள்ளது. ஐ.டி நிறுவனங்கள் போன்றவை 24 மணிநேரமும் தொடர்ந்து டீசலைப் பயன்படுத்துகிறார்கள். மின் தடையும் டீசல் தட்டுப்பாட்டுக்கு ஒரு காரணம். மற்ற மாநிலங்களைவிட தமிழகத்துக்கு டீசல் தேவை அதிகமாக உள்ளது. இது பற்றி மத்திய அரசிடம் பேசி, தமிழகத்துக்கு அதிக டீசலை ஒதுக்கும்படி கேட்போம்” என்றார்.
அப்போது சிறப்பு தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, உணவுத்துறை செயலாளர் சண்முகம், குடிமைப் பொருள் வழங்கல் ஆணையர் ராஜாராம் ஆகியோர் உடனிருந்தனர்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply