சென்னை : வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம், புலி, யானை, கழுதைப்புலி உள்பட அரியவகை விலங்குகள் மற்றும் பறவைகளின் சரணாலயமாக உள்ளது.
இவைகளைக் காண தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பள்ளி மாணவ-மாணவியர் மற்றும் குழந்தைகள் வருகின்றனர்.
விலங்குகளைச் சுற்றிப் பார்க்க எற்கனவே சைக்கிள் திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்ட்டு வருகிறது. அதோடு யானை சவாரி திட்டமும் நடைமுறையில் உள்ளது.
இதைத் தொடர்ந்து பார்வையாளர்களைக் கவரும் வகையில் வெளிநாட்டு உயிரியல் பூங்காவில் இருப்பது போல் விலங்குகளை பார்வையிட நவீன ரக பேட்டரி கார் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கென்று 5 பேட்டரி கார்கள் வாங்கப்பட்டு பூங்காவில் நிறுத்தப்பட்டு இருக்கின்றன. ஒரு காரில் 10 பேர் செல்ல முடியும். இதற்கான கட்டணம் இன்னும் முடிவாகவில்லை. காரை ஓட்ட பூங்கா ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply