முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
இனி பெட்டிக் கடைகளிலும் கிடைக்கும் ரயில் டிக்கெட்!

இனி பெட்டிக் கடைகளிலும் கிடைக்கும் ரயில் டிக்கெட்!

சென்னை : இனி ரயில் டிக்கெட்டுகள் பெட்டிக் கடைகளில் விற்கப்படும். என்ன ஆச்சரியமாக உள்ளதா?

பொதுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ரயில் நிலையத்திற்குச் சென்று மணிக்கணக்கில் கால் கடுக்க காத்திருக்க வேண்டும். இல்லையெனில் வீட்டில் கணிணி வைத்திருப்பவர்கள் வலைதளத்தில் முன்பதிவு செய்வார்கள்.

இப்போது புதிய முறையாக ரயில்வேயின் ஜன சதாரன் திட்டத்தில் டிக்கெட் ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி சென்னையில் 82 ஏஜென்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சாதாரண பெட்டிக்கடைகளிலும் டிக்கெட் கிடைக்கும்.

இது குறித்து தெற்கு ரயில்வே தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி நீனு இட்டியாரா பேசுகையில், “சென்னை, சென்ட்ரலில் மாதம் 7.50 லட்சம் பயணிகளும், எழும்பூர் ரயில் நிலையத்தில் 2.75 லட்சம் பயணிகளும் முன்பதிவு செய்யப்படாத இரண்டாம் வகுப்பு டிக்கெட்டில் பயணம் செய்து வருகின்றனர்.

இதனால் கவுண்டர்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்த நெருக்கடியைத் தவிர்க்கவே இந்த ஜன சதாரன் திட்டத்தை அமல்படுத்த இருக்கிறோம். இதனால் கவுண்டரில் கூட்டம் குறையும்.

டிக்கெட் விற்பனை ஏஜெண்டுகள் மாவட்ட மாஜிஸ்திரேட்டின் நன்னடத்தை சான்றிதழுடன், 1.25 லட்ச ரூபாய் காப்புத் தொகை செலுத்தியும் உரிமம் பெற்றுள்ளனர். முதல் கட்டமாக இவர்கள் இரண்டு ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்படுகின்றனர். வரும் மாதம் இத்திட்டம் அறிமுகப்படுத்தபட உள்ளது” என்றார்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.