லண்டன் : 2013-ம் ஆண்டில் வடதுருவத்தில் பனியே இருக்காது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
ஆர்டிக் பெருங்கடல் பெரும் அளவு உருகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த அதிர்ச்சிகரமான தகவல், செயற்கை கோளில் பதிவானப் படங்களை, கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்ததில் தெரிய வந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட செயற்கை கோள் படத்தில் ஆர்டிக் பகுதியின் பெரும்பாலான பனிக்கட்டிகள் முற்றிலும் மறைந்து விட்டது தெரிய வந்தது.
சென்ற வருடம் ஆர்டிக் கடல் ஒரு லட்ச சதுர கி.மீ பரப்பளவுக்கு உருகியது குறிப்பிடத்தக்கது.
தற்போது இது பல மடங்காகியுள்ளதாம்
இந்த ஆண்டு குளிர்காலத்தில் ஆர்டிக் நீர் உறையாததும் இதற்கு காரணம்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் கோடைக் காலத்தில் ஆர்டிக் கடல் முழுமையாக உருகும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் எச்சறித்துள்ளனர்.
விளைவு கடல்களில் நீர்மட்டம் உயரும், விபரீதமான விளைவுகள் ஏற்படுமாம்.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply