முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
சென்னையில் ‘எய்ட்ஸ் சூத்ரா’ புத்தக வெளியீட்டு விழா!

சென்னையில் ‘எய்ட்ஸ் சூத்ரா’ புத்தக வெளியீட்டு விழா!

ஒற்றுமையுடன் ஒரு புத்தக வெளியீடு!

சென்னை : நேற்று ஆக்ஸ்ஃபோர்ட் புத்தக நிலையத்தில் அம்பை, சல்மான் ருஷ்டி, விக்ரம் சேத், ஷோபா டே, வில்லியம் டேலிரிம்பிள், கிரண் தேசாய் என்று பலர் உருவாக்கிய ‘எய்ட்ஸ் சூத்ரா அன்டோல்டு ஸ்டோரீஸ்’ என்ற ஆங்கிலப் புத்தகத்தின் நூல் வெளியீட்டு விழா நடந்தது.

ராண்டாம் ஹவுஸ் வெளியீடான இந்த புத்தகத்தை ‘அவஹன்’-ன் மூத்த திட்ட அதிகாரி பத்மா சந்திர சேகரன் மற்றும் அம்பை வெளியிட்டனர்.

அம்பை பேசுகையில், “பலர், எச்.ஐ.வி.யுடன் வாழ்பவர்கள் குறித்து புத்தகம் எழுதியுள்ளனர். ஆனால் நான் எய்ட்ஸால் வாழ்க்கையின் முடிவில் உள்ளவர்கள் குறித்து புத்தகம் எழுத விரும்பினேன்.

இதில் சல்மான் ருஷ்டி, ஷோபாடே, சோனியா ஃவெனலரோ என்று 16 புகழ்பெற்ற எழுத்தாளர்கள் மும்பை உட்பட பல நகரங்களில் எய்ட்ஸால் முடிவை நெருங்கிக் கொண்டிருப்பவர்களின் உண்மைக் கதையை விளம்பி உள்ளனர்” என்றார்.

இப்புத்தகத்தின் விலை 395 ரூபாய் மட்டுமே. இதில் விற்கப்படும் ஒவ்வொரு புத்தகத்தின் விலையில் ரூ.80 சென்னை, டெல்லி, ஹைதராபாத் மற்றும் மும்பையில் எச்ஐவி/எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அளிக்கப்பட உள்ளது.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.