முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
புனுகுப் பூனைகள் கேட்கும் திருமலை தேவஸ்தானம்!

புனுகுப் பூனைகள் கேட்கும் திருமலை  தேவஸ்தானம்!

திருப்பதி: உலகுக்கே படியளக்கும் ஏழுமலையானின் தேவஸ்தான அதிகாரிகளிடமிருந்து மத்திய அரசுக்கு ஒரு கோரிக்கை வந்திருக்கிறது. இது சற்று வித்தியாசமான கோரிக்கை.

திருமலா தேவஸ்தான வளாகத்தில் பூனைகளை வாங்கி வளர்க்க உடனடி அனுமதி தேவை என்பதுதான் கோரிக்கையின் முக்கிய சாராம்சம்.

திருமலையில் உள்ள வெங்கடாஜலபதி சிலைக்குப் பூர்ணாபிஷேகம் செய்ய புனுகு எனும் ஒருவித வாசனைத் திரவியம் தேவைப்படுகிறது. இத்துடன் குங்குமப்பூ, சந்தனம், கற்பூரம் போன்றவற்றைப் பயன்படுத்தி இந்த அபிஷேகத்தைச் செய்கிறார்கள். இதில் புனுகு கிடைப்பதுதான் தற்போது மிகவும் சிரம்மாகியுள்ளதாம். இந்த வாசனத் திரவியத்தை புனுகுப் பூனைகளின் வயிற்றுப் பகுதியில் உருவாகும் ஒருவித பிசினிலிருந்து தயாரிக்கிறார்கள்.

இதனால் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூர்ணாபிஷேகத்துக்கே சற்றே சிக்கல் ஏற்பட்டுவிட்டதாம்.

புனுகு கொண்டு அபிஷேகம் செய்வதால், சுவாமி சிலை வழவழப்பாக அதே சமயம் கீறல்கள் ஏற்படாமல் பளிச்சென்றும் காட்சி தருமாம். இது கோயில் பராமரிப்பு சாஸ்திரம் என்பதால் அதை சரியாகக் கடைப்பிடிக்க கோவிலின் நிர்வாகம் அதிக செலவில் புனுகை வாங்கி வருகிறது.

 இதைவிட புனுகுப் பூனைகளை வாங்கி வளர்ப்பதால் தேவையான அளவுக்கு புனுகு கிடைக்கும் என முடிவு செய்து அனுமதி கோரியுள்ளது தேவஸ்தானம்.

சரி… புனுகுப் பூனை மேட்டர் இவ்வளவு சீரியஸா என்று நீங்கள் முணுமுணுப்பது புரிகிறது.

நாட்டின் தேசியப் பறவை மயிலின் தோகைகளைச் சேகரிக்க எப்படி அனுமதி பெறவேண்டுமோ, அதே போல, அழிந்து வரும் அரிய வகை விலங்கு வகைப் பட்டியலில் உள்ள புனுகுப் பூனைகள் வளர்த்து புனுகு சேகரிக்கவும் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்பது சட்டம்!






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.