பெய் பெய், ஜிங்ஜிங், யிஸ்யிஸ், நினி, இவர்களைத் தெரியுமா?
நம் வீட்டுக் குட்டீஸ்களுக்கு டோரா, புஜ்ஜி, பவர் ரேஞசர்ஸ் என்றால் தெரியும்.
யார் இவர்கள் என்று குழம்புகிறீர்களா?
ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும் போட்டி நடக்கும் அந்த நாட்டின் சார்பில் பிரத்யேக சின்னங்கள் அமைக்கப்படும்.
சீனநாட்டின் பிரபல உயிரினங்களான மீன் (பெய் பெய்), பாண்டா கரடி (ஜிங் ஜிங்), திபெத்திய மான் (யிஸ் யிஸ்), ரெட்டை வால் குருவி (நினி) மற்றும் ஒலிம்பிக் ஜோதி (ஹீலான், ஹீவான்) நடுவில் உள்ளது.
இவை ‘புவா’ என்று அழைக்கப்படுகின்றன.
எந்நேரமும் கார்டூன் என்று தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருக்கும்
குழந்தைகளை விளையாட்டுப் பக்கம் திசைத் திருப்ப வைக்கலாமே.
அவர்களுக்குப் பிடித்த ‘புவா’ க்களை ஒலிம்பிக் துவக்க விழாவில்
கண்டுகளிக்க வைக்கலாம்.
பிறகு குழந்தைகளுக்கு விளையாட்டின் மீது ஒரு ஆர்வம் தானாகவே வந்துவிடும்.
ஆசிய விளையாட்டு ‘அப்பு’ போல இந்த ஒலிம்பிக் ‘புவா’ மக்கள் மனதில்
நிலைக்குமா என்று தெரியவில்லை.
புதுசு புதுசா
- இந்தியா - ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
- சீறிக் கிளம்பியது சந்திரயான் 1
- ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது, இந்திய அணி!
- பண்டிகைகால சலுகை, கடன் வட்டி குறைப்பு
- தான்சேனாக அபிஷேக் பச்சன்!
- புக்கட் தீவுகள் - இயக்குனர்களின் விருப்பபூமி!
- வங்கிக் கடன் குறைந்தால் வணிகர்களுக்கு கொண்டாட்டம்!
- தீபாவளி சிறப்பு சலுகை, அனைத்து தியேட்டர்களிலும் 5 காட்சிகள்



Leave a Reply