முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
விரைவில் உஸ்மான் சாலை மேம்பாலம் திறப்பு - ஸ்டாலின்

விரைவில் உஸ்மான் சாலை மேம்பாலம் திறப்பு - ஸ்டாலின்

சென்னை: சென்னை நகரில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

புறநகர் பகுதிகளிலிருந்து வருபவர்கள் கூட அலுவலகத்துக்கு அரை மணி நேரத்தில் வந்துவிடுவர். ஆனால் நகரின் மையப்பகுதியில் இருப்பவர்கள் அலுவலகம் சென்று சேர அரை நாள் ஆகிவிடுகிறது.

இதற்காக தமிழக அரசு பல மேம்பாலங்களை கட்ட திட்டமிட்டது.

19. 80 கோடி செலவில் கடடப்பட்டுள்ள சென்னை, உஸ்மான் சாலை, துரைசாமி சாலை மேம்பாலம வரும் 14-ம் தேதி முதல் அமைச்சரின் திருக்கையால் திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில் நேற்று காலை மேம்பாலத்தின் இறுதிக்கட்டப் பணிகள் குறித்து அமைச்சர் மு.க.ஸ்டாலின் நடந்தே சென்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர், “இந்த மேம்பாலத்தின் பணிகள் முடிவடைந்து விட்டன. 14-ம் தேதி முதல்வர் திறந்து வைக்க உள்ளார். இப்பாலத்தின் கீழே பூங்கா அமைப்பது, வாகனம் நிறுத்துமிடம் அமைப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்.

மேலும் இத்தகைய மேம்பாலங்கள் கட்டப்படுவதன் மூலம் சென்னை நகரில் இனி போக்குவரத்து நெரிசல் இருக்காது. இந்த ஆண்டு டிசம்பர் ஜி.என்.செட்டி ரோட்டில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் திறக்கப்படும்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஆலந்தூர் சாலை பாலப்பணி, மணியக்கார சத்திரத் தெரு ரெயில்வே சந்திக்கடவின் குறுக்கே கட்டப்படும் சுரங்கப்பாதை பணி முடியும்.

ரங்கராஜாபுரம் ரயில்வே சந்திக்கடவின் குறுக்கே, நடைபெற்றுவரும் மேம்பாலம் அடுத்த செப்டம்பர் மாதம் முடிக்கப்படும்” என்றார்.

இனி சென்னையில் போக்குவரத்து நெரிசல் இருக்காது என நம்பலாம்!






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.