முதல் பக்கம் | செய்திகள் | சினிமா | வணிகம் | சமையல் | ஆன்மீகம் | வீடியோ | கேலரி | ஆரோக்கியம் | கோப்புகள் | சுற்றுலா
18-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நீட்டிப்பு

18-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி நீட்டிப்பு

சென்னை: வாக்காளர் அடையாள அட்டை சரிபார்க்கும் பணி வரும் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தனது அறிக்கையில் கூறியுள்ளார்,
வாக்காளர் அடையாள அட்டை சரி பார்க்கும் பணிக்கான ஏற்பாடுகளை ஊழியர்கள் செயல்படுத்துவதற்கு வசதியாக இந்தக் கால அவகாசம் தரப்பட்டுள்ளது.

தற்போது வாக்காளர் பட்டியல் சரி பார்ப்புப் பணி துரிதமாக நடந்து வருகிறது.
இதில் ஓரு வாக்கு சாவடி அதிகாரி வாக்காளர் பட்டியலில் பெயர்
விடுபட்டவர்களுக்கு படிவங்களை தராமல் அரசியல் கட்சி அதிகாரி ஓருவரிடம் கொடுத்தது கண்டறியப்பட்டு அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர், வாக்குச் சாவடி அதிகாரியிடம் படிவம் 6(001ஏ) படிவத்தை பெற்று தனது பெயரை இடம் பெற முயற்சி செய்யலாம்.

வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிக்காக செல்லும் வீடுகளில் அங்கு
சென்றதற்கு அடையாளமாக அத்தாட்சி ஸ்டிக்கர் ஓட்டப்பட வேண்டும்.

இதை கருத்தில் கொண்டு சரிபார்ப்பு பணி முழுமைசயாக நடைபெற கால அவகாசத்தை 18-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் அதிகாரி எச்சரிக்கையும் விடுத்துள்ளார், பணியில்
அலட்சியம், கடமையை சரிவர செய்ய தவறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என்று நரேஷ் குப்தா கூறியுள்ளார்.






புதுசு புதுசா

Leave a Reply



ADVERTISEMENTS

Home | Disclaimer | Privacy Policy | Terms and Condition | Feedback | RSS Feed
(c)2008 Chennai Media Services Pvt. Ltd. All Rights Reserved.